பி.எம்.எம்.ஏ.காதர்;
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் 2014-2015ம் ஆண்டுக்கான பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கு பெற்றோர்களில் இருந்து எட்டுப்பேரைத்தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை (30-03-2014) கல்லூரி அஷ்ரப் மண்டபத்தில் அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்;.
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய கட்டுப்பணம் செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொண்ட பெற்றோர்கள்; 291 பேரில் 235 பேர் சமூகமளித்திருந்தனர் இதில் 34 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை 201 பேர் வாக்களித்தனர் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது.
பெற்றோர்களின் வாக்களிப்பின் மூலம் வாக்குகளைப் பெற்றவர்களின் விபரம் இவை :- வர்த்தகர் வை.கே.றகுமான் 153, கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் 151, கல்முனை காணிப்பதிவாளர் எம்.ஏ.ஜமால்முகம்மது 151, சப்ரகமுவ பல்கலைக்; கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல்கரீம் 150, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முகர்ரப் 150, சட்டத்தரணி எம்.ஐ.றைசுல் ஹாதி 145, கிழக்குப் பல்கலைக் கழக உதவிப்பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் 142, எம்.எச்.எம்.நியாஸ்137, சறோ நிறுவன முகாமைத்தவப் பணிப்பாளர் எம்.எச் தாஜூதீன் 52,கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் 49, வர்த்தகர் எம்.ஐ.உபைதுர்றகுமான் 43,பிராந்திய முகாமையாளர் எம்.ஐ.எம்.பைசால் 34, ஏ.ஆர்.ஹிஸ்புள்ளா 33. ஆசிரியர் ஏ.எம்.அபுல்ஹக்கீம் 23, மரணவிசாரணை அதி;காரி எம்.ஐ.நஸ்றுள் இஸ்லாம் 23, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ் 21, வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் ஏ.ஆர்.எம். வாஹித் 15 ஆகியோர் போட்டியிட்டு மேற்படி வாக்குகளைப்பெற்றனர்.
இவர்களில் இருந்து பின்வரும் வர்த்தகர் வை.கே.றகுமான் 153, கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் 151, காணிப்பதிவாளர் எம்.ஏ.ஜமால்முகம்மது 151, சப்ரகமுவ பல்கலைக்; கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல்கரீம் 150, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முகர்ரப் 150, சட்டத்தரணி எம்.ஐ.றைசுல் ஹாதி 145, கிழக்குப் பல்கலைக் கழக உதவிப்பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் 142, எம்.எச்.எம்.நியாஸ் 137, ஆகிய எட்டுப்பேர் அபிவிருத்திக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அபிவிருத்திக்;; குழுவுக்கு எப்போதும் பெற்றோர்கள் போட்டி போட்டு இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment