ஐ.பி.எல். சீசன் 7 போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி ஜூன்-1 வரை 3 கட்டங்களாக நடைபெறும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
7-வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, இப்போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி ஜூன்-1 வரை 3 கட்டங்களாக நடைபெறும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
முதல் கட்ட போட்டி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ஏப்ரல் 16-ல் தொடங்குகிறது. ஏபரல் 30 வரை நடைபெறும் முதல் கட்ட போட்டியில் மொத்தம் 16 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.7-வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, இப்போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி ஜூன்-1 வரை 3 கட்டங்களாக நடைபெறும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
இரண்டாவது கட்ட போட்டி மே 1-ல் தொடங்கி மே-12 வரை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஐ.பி.எல். போட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் மீண்டும் உறுதியாக தெரிவித்துவிட்டால், 2-ம் கட்ட போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும். அப்படி இல்லையென்றால் இரண்டாம் கட்ட போட்டி இந்தியாவிலேயே நடைபெறும் என ஐ.பி.எல். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1-ல் தொடங்கி மே-12 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் போட்டிகளை நடத்திக் கொள்ள உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மே 13-ம் தேதி இந்தியாவில் துவங்கும் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட போட்டிகள் ஜூன் 1-ல் நிறைவுபெறுகிறது.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் மே 16-ம் தேதி எண்ணப்படுகின்றது. அன்றைய தினம் ஐ.பி.எல். போட்டிகள் ஏதும் நடைபெறாத என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment