• Latest News

    March 25, 2014

    மற்றைய பிரதேச மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் சாய்ந்தமருதுக்கு பிரதேசசபை அமைக்கப்படும் -அமைச்சர் அதாவுல்லாஹ்

    எம்.வை.அமீர்;
    பல்லாண்டுகாலமாக சாய்ந்தமருது மக்களின் அவசர தேவையாக கருதப்படும் பிரதேசசபையை மற்றைய பிரதேச மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அதாவது மருதமுனைக்கோ கல்முனைக்கோ அல்லது அங்குவாழும் தமிழ் மக்களுக்கோ அநீதி ஏற்படாத வகையில் சாய்ந்தமருதுக்கு பிரதேசசபை அமைத்து வழங்கப்படும் என்று,  இன்று 2014-03-24 மாலை லீ மெரிடியன் வரவேட்புமண்டபத்தில், ‘சாய்ந்தமருதுக்கு என உள்ளுராட்சி மன்றக்
    கோரிக்கை என்ற தலைப்பில் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம். அதாவுல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதாகவும் பிரதேசசபை ஒன்றை இலகுவாக அமைத்துவிட்ட போதும் அதற்க்கான வசதிகளை தேடிக்கொள்வதில் தான் சிக்கல்கள் ஏற்படுவதாக தெரிவித்தார். உதாரணமாக கட்டிடம் வாகனங்கள் ஆளணி என பல்வேறுபட்ட தேவைகளை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    இருந்த போதும் சாய்ந்தமருது மக்கள் தேசிய காங்கிரசுக்கு சரியான அரசியல் அந்தஸ்த்தை வழங்குவார்களானால் அதனுடாக அவர்கள் வழங்கும் பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களைக் கொண்டு இவ்வாறான தேவைகளை அடைவது இலகு என்றும் தெரிவித்தார். 

    சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கு கொண்டிருந்த இந்நிகழ்வில் கல்முனையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டார். இதன்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுடீன், எம்.எல்.ஏ அமீர் போன்றோருடன் சாய்ந்தமருது வர்த்தகசங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

    எவ்வாறேனும் சாய்ந்தமருதுக்கு பிரதேசசபையினை பெற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர் அதாவுல்லாஹ் எப்போது பெற்றுத்தரமுடியும் என குறிப்பிடவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மற்றைய பிரதேச மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் சாய்ந்தமருதுக்கு பிரதேசசபை அமைக்கப்படும் -அமைச்சர் அதாவுல்லாஹ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top