• Latest News

    March 14, 2014

    அமெரிக்காவின் பிரேரணையை கண்டித்து கல்முனையில் இன்று ஆர்ப்பாட்டம்

    ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவிருக்கும் குற்றப் பிரேரணையை கண்டித்து இன்று கல்முனை பிரதேச முஸ்லிம்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

    கல்முனைக்குடி முகைதீன்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஆரம்பமான இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினார்கள்.

    ஜெனீவா பிரேரணையில் ஜனாதிபதியையும், நாட்டையும் ஆதரித்து கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவணயீர்ப்புப் ஆர்ப்பாட்ட பேரணியில் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை சென்றது.

    இதன்போது அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரினால் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

    கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,  கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட 20 பள்ளிவாசல்கள் 03 வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், 22 சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், 18 விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்தனர்.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவின் பிரேரணையை கண்டித்து கல்முனையில் இன்று ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top