• Latest News

    March 20, 2014

    பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

    கொழும்பு - கோட்டையில் வீதியை மறைக்கும் வகையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    மாணவர்கள், களனி பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இருந்து பேரணியாக கொழும்பு கோட்டை வரை வந்தனர்.
    பேரணியாக வந்த மாணவர்கள் தமது கோரிக்கைகளை பெற்று தருமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக கோட்டை பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதுடன், தண்ணீர் தாக்குதலும் நடத்தப்பட்டது.
    மாணவர்களின் பேரணி காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    கல்வியை தனியார் மயப்படுத்துவது, கல்விக்கான நிதி குறைக்கப்பட்டமை, மாணவர் அடக்குமுறை உட்பட அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் 15 கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.
    இதில் சகல பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top