• Latest News

    March 12, 2014

    மு.கா தலைவர் ஹக்கீமுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை!

    கடந்த சில நாட்களாக அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் விதத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.  

    அவை தொடர்பில், அமைச்சர் மேர்வின் சில்வா களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ஹக்கீமுக்கு எச்சரிக்கும் வகையில் கூறியதாவது,

    'நான் அமைச்சர் ஹக்கீமுக்கு கூறுகிறேன், அரசாங்கத்தை கொண்டு செல்ல 113 ஆசனங்கள் தான் தேவை. இப்பொழுது 160க்கு மேற்பட்டவர்கள் எங்களோடு இருக்கிறார்கள். அவருடன் சிலர் இருக்கலாம். ஜனாதிபதியின் வார்த்தைகளில் கூறுவதானால், கதவு திறந்திருக்கிறது வெளியேறிச் செல்லுங்கள். ஆனால், நாட்டுக்கு துரோகியாகி விடாதீர்கள். அவ்வாறானால் உங்களுக்கும் பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான்.

    கூடுதலாகப் பேசி ஜாதி, மத பேதத்தை ஏற்படுத்தாமல், தயவு செய்து வாயை அடக்கிக்கொண்டு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பது தான் உகந்ததென எனது நண்பருக்கு கூறிக்கொள்கிறேன்.

    இதனை, அமைச்சர் ஹக்கீமின் கருத்துக்களோடு சம்பந்தப்படுத்தி, புதன்கிழமை (12) நண்பகல் தனியார் தொலைக்காட்சிகள் இரண்டு ஒளிபரப்புச் செய்தன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.கா தலைவர் ஹக்கீமுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top