தமிழ் பத்திரிகைகள் தன்னை பற்றிய செய்திகளை வெளியிடும் விதம் காரணமாக தமிழர்கள் தன்னை இனவாதியாக எண்ணக் கூடும் எனவும் எனினும், மக்களுக்கு சேவையாற்றும் போது தான் இன, மத பேதங்களை பார்ப்பதில்லை எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்தாலும் தமிழ் மக்களை எமக்கு எந்த விரோதமும் இல்லை.
மக்கள் சந்திப்புகளை நடத்தும் தினங்களில் தமிழ் மக்கள் என்னிடம் வருவதுண்டு. இன, மத பேதங்களை கவனத்தில் கொண்டு நாங்கள் அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் விடுவதில்லை.கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்தாலும் தமிழ் மக்களை எமக்கு எந்த விரோதமும் இல்லை.
நான் பிரச்சினையை தீர்க்க மாட்டேன் என்ற எண்ணத்துடன், சிலர் என்னிடம் வருகின்றனர். சில தமிழ் பத்திரிகைகள் என்னை பற்றி எழுதும் செய்திகளின் அடிப்படையில் நான் மிகப் பெரிய இனவாதி.
ஆனால் நாங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் தமிழ் மக்களுக்கு நாங்கள் இனவாதிகள் இல்லை என்பது புரியும். நாட்டை பிரிப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நாம் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றோம்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிளவுப்படுத்தி, மோதவிட்டு நாங்கள் அரசியல் செய்வதில்லை. இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment