இலங்கை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய துரிதமான சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவது உட்பட சில விடயங்களுக்கு பிரேரணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவது உட்பட சில விடயங்களுக்கு பிரேரணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விசாரணை குழு ஒன்றின் ஊடாக இலங்கையில் போர் நடைபெற்ற காலத்ததில் இருத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவார்.
இந்த விசாரணைக்கு எந்த வகையில் உதவ போவதில்லை என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில், மனித உரிமை ஆணையாளர் தன்னிச்சையான விசாரணைகளை நடத்துவார் என முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாய நிலைப்பாடுகளின் அடிப்படையிலும் தவறான எண்ணக் கருவின் அடிப்படையில் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வலுவான நிலைமை இல்லை என்றாலும் எதிர்காலத்தில் அது ஐ.நா பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என இலங்கை மனித உரிமை ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் சபை பிரேரணை நிறைவேற்றவோ, நிராகரிக்கவோ அல்லது இலங்கைக்கு எதிராக தடைகளையோ விதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment