மீர்பூரில் சனியன்று நடந்த பந்தயத்தின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது.
முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர்.
பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார்.
துவக்க ஆட்டக்காரர் திரிமான்ன சதமடித்திருந்தார்.
மூத்த ஆட்டக்காரர் மஹேல ஜெயவர்த்தன 75 ரன்களைக் குவித்து அணியின்
வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த ஆசியக் கோப்பை பந்தயத்தில் தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் அனைத்திலுமே இலங்கை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment