• Latest News

    March 07, 2014

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல்

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை (07) முற்பகல் சந்தித்து உரையாடினார்.
    எதிர்வரும் மேல்மாகாண சபைத் தேர்தலிலும், தென்மாகாண சபை தேர்தலில் மாத்தறை மாவட்டத்திலும் முன்னெடுக்க வேண்டிய பிரசார நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
    வட, வடமேற்கு, மத்திய மாகாண சபை தேர்தல்களின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசார பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு, கட்சியின் வெற்றிக்கு ஒத்துழைத்ததற்காக அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  
    வெள்ளிக்கிழமை மாலையில் மீண்டும் அவர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'தாருஸ்ஸலாம்'  தலைமையகத்தில் சந்தித்து விரிவாக கலந்துரையாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top