• Latest News

    March 07, 2014

    இலங்கையில் முதலீடு செய்ய சவூதி முதலீட்டாளர்கள் ஆர்வம் - அமைச்சர் ஹக்கிமுடன் ஆலோசனை

    இலங்கையில்  பொருளாதார துறைகளில் பயனுள்ள முதலீடுகளை மேற்கொள்வது அவற்றில் சம்பந்தப்படும் நாடுகளுக்கும் சமூகத்திற்கும் அதிக நன்மை பயக்கும் எனக் கூறிய நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையோடு சமய ரீதியாக மட்டுமல்லாது, வர்த்தக ரீதியாகவும் தொடர்புகளை பேணி வந்த அரேபியாவின் முதலீட்டாளர்களின் ஈடுபாட்டை தாம் பெரிதும் வரவேற்பதாகவும் கூறினார்.
    சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து இங்கு வந்துள்ள பாரிய வர்த்தக வலைப்பின்னலைக் கொண்டுள்ள தொழில் அதிபர்களான அப்துல்லா பஹூமெய்த், அஹமத் அல் தஹீல், பஹத் அல் தஹீல், பைசல் அல் தஹீல் ஆகியோர் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மதுடன் அமைச்சர் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (07) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
    ஆரம்பத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய சவூதி அரேபிய தொழிலதிபர்கள்,  அமைச்சரிடம் இருந்து அவற்றிற்கான வாய்ப்புக்கள், பயனுள்ள தொழிற்துறைகள், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படக் கூடிய சட்ட ரீதியான  உத்தரவாதங்கள், முதலீடுகளுக்கான பாதுகாப்புக்கள் என்பன பற்றி அறிந்துகொள்வதற்கு விரும்பினர். அமைச்சர் ஹக்கீம் உரிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினார். மேலதிகத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
    விவசாயம், பெருந்தோட்டத் தொழில், கால்நடை உற்பத்தி, மீன்பிடித்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றில் கிழக்கு மாகாணத்திலும், இலங்கையின் கடலோரப் பிரதேசங்களிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருப்பதாக அமைச்சர் ஹக்கீம் அவர்களிடம் விளக்கிக் கூறினார். கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுவும் அவர்களுக்கு தேவையான விளக்கங்களை அளித்தார். முதலீடுகளோடு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களையும் அவர்கள் தொடர்பு கொள்ளவுள்ளனர்.        



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் முதலீடு செய்ய சவூதி முதலீட்டாளர்கள் ஆர்வம் - அமைச்சர் ஹக்கிமுடன் ஆலோசனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top