ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதியயுர் பீடத்தின் முக்கியமான கூட்டம் ஒன்று
இன்றிரவு நடைபெறவுள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன்
தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமது கட்சிக்கும் இடையில்
ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து இதன் போது விரிவாக
கலந்துரையாடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக கூறப்படும் அறிக்கை தொடர்பாகவே இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த அறிக்கை சம்பந்தமாக கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் ஹக்கீம் கடுமையாக சாடியதாகவும் விரும்பினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலைமை சம்பந்தமாக இன்று நடைபெறும் கட்சியின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்றும் ரஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment