உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த ஐபிஎல் வழக்கின் தீர்ப்பில் ராஜஸ்தான் றொயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணீகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுக் கொண்டது.
ஐபிஎல் விவகாரத்தில் சீனிவாசனை பதவி விலகக்கோரிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கும் வரை பிசிசிஐ தலைவராக பதவியளிக்க சீனிவாசனுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இதன் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படுவர் என தெரிவித்தது.
மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் தொடர்புடைய எந்த நபரும் பிசிசிஐ சமந்தப்பட்ட வழக்கில் தலையிடக்கூடாது எனவும், இந்திய குழு நாளை அதன் திட்டங்களின் முழு பிரதிபலிப்பை கொண்டு வர வேண்டும் என தீர்ப்பளித்தது.ஐபிஎல் விவகாரத்தில் சீனிவாசனை பதவி விலகக்கோரிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கும் வரை பிசிசிஐ தலைவராக பதவியளிக்க சீனிவாசனுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இதன் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படுவர் என தெரிவித்தது.
கடந்த ஐ.பி.எல்லில் சென்னை அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பனும்இ ராஜஸ்தான் அணியின் உரிமையாளரான ராஜ் குந்தராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உட்பட 5 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment