தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் இசைக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனை ஏற்றக்கொள்கின்றோம்.
தோட்டப் பகுதிகளில் கூட தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்படுகின்றது.
தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பாடப் புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே ஏன் புதிய பிரச்சினைகள் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அது தொடர்பில் ஏன் சர்ச்சைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
புரியாத மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதனால் உணர்வு ஏற்படாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
வேறும் மொழிகளில் தேசிய கீதம் இசைப்பது அரசியல் அமைப்பினை மீறும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment