மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் கடந்த இரண்டு
வருடங்களில் 329 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியது என சிவில் விமான
சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இந்த
விமான நிறுவனம் 329 கோடியே 34 லட்சத்து 74 ஆயிரம் ரூபா இழப்பை
சந்தித்துள்ளது. அத்துடன் 2011 ஆம் மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 196 கோடியே
78 லட்சம் ரூபா இழப்பை சந்தித்தது.
மிஹின் லங்கா நிறுவனத்தில் ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் தற்போது சேவையாற்றும் ஒரு ஊழியருக்காக மாதாந்தம் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 649 ரூபா செலவிடப்படுகிறது.
இதனை தவிர மிஹின் லங்கா நிறுவனம் நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் 283 கோடி ரூபா கடனை பெற்றுள்ளது எனவும் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்வி ஒன்று பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment