எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்;
கல்முனை மாநகரசபையின் ஆளுகைக்குள் வாளும் மக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் எவராவது
ஒருவர் அவர் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மக்களை விட்டு ஒதுங்கிவிட்டால் அவர்
சென்றுவிட்டார் என்பதற்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களை நாங்கள்
கைவிடமாட்டோம் என கல்முனைமாநகரசபையின் முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர்
தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர்
நிஸாம் காரியப்பர் தான் கல்முனை மாநகரசபையின் எல்லைக்குள் உள்ள
எந்தப்பிரதேசத்தையும் வேறாக்கி பார்ப்பதில்லை என்றும் இதுவிடயத்தில் ஏனைய மக்கள்
பிரதிநிதிகளோ அல்லது மக்களோ கவலைப்படத்தேவையில்லை என்றும் தெரிவித்த முதல்வர்
எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கிக்கூறினார்.
கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர்
ஏ.அமிர்தலிங்கம்,இசட்.ஏ.எச்.ரஹு மான், ஏ.எம்.ரியாஸ், எம்.ஐ.பிர்தௌஸ்,
ஏ.எச்.எச்.எம்.நபார் ஏ.ஏ.பசீர் போன்றோரும் அவர்கள் சார்ந்த மக்களின் தேவைகளை
மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தனர்.

0 comments:
Post a Comment