• Latest News

    March 07, 2014

    பொருளாதார தடைகளால் இலங்கையை எவராலும் வீழ்த்த முடியாது :அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா

    இலங்கைக்கு தேவையான சகல அடிப்படை வளங்களும் நாட்டுக்குள் இருப்பதால் எப்படியான பொருளாதார தடைகளை விதித்தாலும் இலங்கையை எவராலும் வீழ்த்த முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
    இரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    நாட்டுக்கு தேவையான அடிப்படை வளங்கள் உள்நாட்டில் இல்லாத நிலையிலேயே பொருளாதார தடைகளால் நாட்டை வீழ்த்த முடியும். ஆனால் இலங்கைக்குள் சகல வளங்களும் உள்ளன.

    உலகில் பல நாடுகளில் வேலை வாய்ப்பு பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. வல்லரசான அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 12 வீதமாக அதிகரித்துள்ளது.
    ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வேலை வாய்ப்பு பிரச்சினைகள் இலங்கையில் குறைந்துள்ளன.
    சில பிரச்சினைகள் இலங்கைக்கு மட்டுமே உரிய பிரச்சினைகள் அல்ல. முழு உலக சமூகமும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளாகும். அப்படி பார்க்கும் போது இலங்கை மிகவும் அதிஷ்டமானது என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொருளாதார தடைகளால் இலங்கையை எவராலும் வீழ்த்த முடியாது :அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top