• Latest News

    March 07, 2014

    முதலமைச்சர் இவர்தான் என பசில் எப்படிச் சொல்வார்...? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? - கெடிக்கார

    மேல் மாகாண சபை முதலமைச்சரை பெயர் குறித்து, நியமிக்கும் அதிகாரம் பசில் ராஜபக்ஷவுக்கு கிடையாது எனவும், அது ஜனாதிபதியினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி வேட்பாளர் உபாலி கொடிக்கார குறிப்பிடுகிறார்.

    “முதலமைச்சர் பதவி கொழும்புக்கு வழங்கப்பட வேண்டும். ரெஜினல்ட் குரே களுத்துறையிலிருந்து நியமிக்கப்பட்டார். பிரசன்ன ரணதுங்க கம்பஹாவிலிருந்து நியமிக்கப்பட்டார். இம்முறை முதலமைச்சர் பதவி கொழும்புக்கு வழங்கப்பட வேண்டும்.


    முதலமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியே முடிவு செய்வார். யார் அதிகூடுதலான வாக்குகளைப் பெறுகின்றார்களோ அவர்களுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு வந்தது. இம்முறை கொழும்பிலிருந்து இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுவேன். இவரைத்தான் நியமிப்பேன் என ஜனாதிபதி இதுவரை சொல்லவில்லை. தலைமைத்துவத்துக்கான அனைத்துத் தகுதிகளும் என்னிடமே உள்ளது. ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுப்பார்” என கொடிக்கார குறிப்பிட்டுள்ளார்.

    (கேஎப்)

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முதலமைச்சர் இவர்தான் என பசில் எப்படிச் சொல்வார்...? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? - கெடிக்கார Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top