கிழக்குமாகாணத்தில் இருந்து கிழக்கு
முஸ்லிம்கள் பிரஜைகள் குழு என்னும் உலமாக்கள் சிலர் நேற்று(05) கொழும்பு
நிப்போன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தினர்.
இவர்களிடம் ஊடகவியலாளர்கள் அங்கு
சமுகமளித்திருந்த ஊடகவியலாளர்கள் முஸ்லிம்களுக்கு நாளுக்கு நாள்
ஏற்படும்பிரச்சினைகள் பற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். தெஹிவளைப்
பள்ளிவாசல் பிரச்சினை, முஸ்லிம்களது உடை ஹலால் பிரச்சினைகளை நீங்கள்
அறிந்திருக்க வில்லையா? என கேள்விகளை முன்வைத்தார்கள்
இம் மாகாநாட்டில் மருதமுனையைச் சேர்ந்த –
எம்.எம்.ஏ மௌலவி அன்சாரி மொளலானா என்பவரும் காத்தாண்குடி முஸ்தபா மௌலவி
என்பவர் அடங்கலாக சிலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அங்கு பேசும்போது ஜெனிவாவில் மனித
உரிமைப் பேரவையால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள்
நடைமுறைக்கு வந்தால் இலங்கைச் சமுகம் பொருளாதார அரசியல் ரீதியாக
பாதிக்கப்படலாம். இலங்கைக்கு பொருளாதாரத் தடை ஏற்படலாம். இதனால் இலங்கையில்
உள்ள சகலரும் பாதிக்கப்படுவோம் எனவும் தெரிவித்தனர்.
எனவே மேற்படி ஜெனிவா மனித உரிமை தீர்மானம்
வெற்றிபெறாத வகையில் வலுவான எதிர் செயற்பாட்டை அரபுநாடுகள் எடுக்க வேண்டும்
நாங்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சார்பாக
கேட்டுக்கொண்டுள்வதாகவும் தெரிவித்தனர்.
கேட்டுக்கொண்டுள்வதாகவும் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச அவர்களின் உற்ற நண்பன் அவருடன் மிகவும் விசுவாசமாக இருந்து
வருகின்றனர். அவர் அரபு நாடுகளின் நண்பன் பலஸ்தீனத்தில்மஹிந்த ராஜபக்ச
வீதியும் கூட அந்த நாடு திறந்து வைத்துள்ளது. அவர் முஸ்லிம்களுக்கு பாரிய
அபிவிருத்திகளைச் செய்து வருகின்றார்.
சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை உள்வீட்டு பிரச்சினை அதனை பேசித் தீர்த்துக்கொள்ளலாம். எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மருதமுனையைச் சேர்ந்த உள்ளுர்
அரசியல்வாதியான ஜ.பி. ரஹ்மாண் அவர்கள் ஊடகவியலாளர் மாநட்டை நாடத்துவதற்கான
சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார். சகல சிங்கள தெலைக்காட்சிகளும் இங்கு
வருவிக்கப்பட்டிருந்தன.


0 comments:
Post a Comment