மனித
உரிமை பிரச்சினைகள் தொடர்பாக இலங்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரண்டு
தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை தொடர்பான விடயத்தில்
அமெரிக்க செனட் பிளவுப்பட்டுள்ளதை காண முடிவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன
தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கைக்கு ஆதரவாக 11 செனட் உறுப்பினர்கள் அண்மையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்ததுடன், இலங்கை எதிராக 8 செனட் உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்.
இலங்கை ஆதரவான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்த அமெரிக்க செனட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.
அமெரிக்க செனட்டில் இலங்கை பிரச்சினை தொடர்பில் முந்தைய சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ஒருமனதான மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டன. ஆனால் தற்போது அமெரிக்க செனட் பிரிந்துள்ளது.
அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளது. இலங்கை செய்துள்ள சாதனைகள் மூலம் இங்கு நல்ல நிலையில் இருப்பதை இந்த தீர்மானம் காட்டுகிறது.
இந்தியாவில் உள்ள சிலர் மற்றும் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான குழுக்களின் ஆதரவுடன் சில உறுப்பினர்கள் தனிப்பட்ட பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றனர்.
மோதலுக்கு பின்னர் எமது செயற்பாடுகளை நாங்கள் மிக வேகமாக நகர்த்தியுள்ளோம். வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பியது. பொருளாதார முன்னேற்றம் என அனைத்து முனைகளிலும் வேகமான முன்னெடுக்கப்படுகள் மேற்கொள்ளப்பட்டன என அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை பக்க சார்பானது எனக் கூறினார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்த நவநீதம்பிள்ளைக்கு எந்த உரிமையுமில்லை.
இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கும் நவநீதம்பிள்ளையின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் குரல் எழுப்ப வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்தார்.

0 comments:
Post a Comment