பொத்துவில் சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச
மகளிர் தின விழா சுற்றுலா பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பசுபிக் ஹோட்டலில்
இடம்பெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் ஏ,எம்,ஜவ்பர் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எச்,எம்,எம், ஹரீஸ் பிரதம அதிதியாக
கலந்துகொண்டார்.
இதில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அமைப்புக்கலின் மூவினம்களையும் சார்ந்த பிரதி நிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதன்போது
பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன்
1000 பெண்களுக்கு இலவச மூக்குக்கன்னாடிகளும் , 600 தென்னம் கன்றுகளும்
இலவசமாக வழங்கப்பட்டது.







0 comments:
Post a Comment