சுலைமான் றாபி;
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பெரிய
பாலத்தில் நேற்றையதினம் (07.03.2014) இரவு 12.30 மணியளவில் மரக்கறிகளை
ஏற்றிக் கொண்டுவந்த டிப்பர் வாகனம் பாலத்துடன் மோதுண்டதால் இந்த வாகனத்தில்
பயணித்த இருவரில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.
மஜீத் (42) என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த ஐ.எல்.றஹீம் (25)
தற்போது நிந்தவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை கடந்த மாதம் 17ம் திகதி நிந்தவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments:
Post a Comment