• Latest News

    March 07, 2014

    ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டேன்: அப்ரிடி

    பாகிஸ்தான் அணிக்கு ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டேன் என பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    ஆசிய கிண்ணத் தொடரில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, இறுதிச்சுற்றுக்குள் நுழைவதற்கு அச்சாணியாக இருந்தவர் ஆல்-ரவுண்டர் சாகித் அப்ரிடி.

    இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 34 ஓட்டங்கள் விளாசி கடைசி ஓவரில் த்ரிலிங்கான வெற்றியை தேடி தந்தார்.

    அதுமட்டுமின்றி வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்திலும் இறுதி கட்டத்தில் ருத்ர தாண்டவமாடினார்.

    அதில் 25 பந்துகளில் 7 சிக்சருடன் 59 ஓட்டங்கள் எடுத்து, பாகிஸ்தான் 327 ஓட்டங்கள் இலக்கை 'சேசிங்' செய்ய வித்திட்டார்.

    ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மிர்புரில் நாளை மோதுகின்றன.

    இந்நிலையில் அப்ரிடி அளித்துள்ள பேட்டியில்இ எனது ஆட்டத் திறமையின் மூலம் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க ஆசைப்படுகிறேன்.

    ஆனால் எல்லா நாளும் இதே போன்று ஓட்டங்கள் குவிக்க முடியாது. அதனால் தான் பேட்டிங் மட்டுமின்றி, பந்து வீச்சிலும் கவனம் செலுத்துகிறேன்.

    இந்த வழியில் அதாவது பேட்டிங் அல்லது பந்துவீச்சில் எனது திறமையை வெளிப்படுத்தி, அணிக்கு உதவிட என்னை தயாராக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

    2015ம் ஆண்டு உலக கிண்ணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். உடல் தகுதி இருக்கும் வரை எனது வாழ்க்கை முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்து தொடர்ந்து விளையாடுவேன்.

    ஆனால் பாகிஸ்தான் அணிக்கு சுமையாக இருக்கிறேன் என்று எப்போது உணரத் தொடங்குகிறேனோ அந்த தினமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். மற்றவர்கள் அது பற்றி(ஓய்வு குறித்து) பேச வாய்ப்பு தரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டேன்: அப்ரிடி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top