• Latest News

    March 09, 2014

    அக்கரைப்பற்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் சர்வதேச மகளிர் தின விழா

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    அக்கரைப்பற்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று (2014.03.08) சனிக்கிழமை அக்கரைப்பற்று இசங்கணிச்சீமை பிரதேசத்தில்; அமைப்பின் இணைத்தலைவர்எம்.எல்.எம்.இஸ்மாயீல் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

    இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஐனாப். ஏ.எல்.எம். சலீம் அவர்களும் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெண்கள் பிரிவுக்கு பொறுப்பான டாக்டர் ஐனாபா. சுவீட்டா சுலைமான் அவர்களும் விசேட அதிதியாக இசங்கணிச்சீமை ஐ_ம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.கே. சுலைமா லெவ்வை அவர்களும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் பௌசுல் அமீன் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து ; சிறப்பித்தார்கள்.

    இந் நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர் ஐனாபா சுவீட்டா சுலைமான் அவர்களினால்  'பெண்களும் சுகாதார உணவுப் பழக்க வழக்கங்களும்' எனும் தலைப்பிலும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களினால் 'நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்ட பொண்களுக்கு அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்கரைப்பற்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் சர்வதேச மகளிர் தின விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top