• Latest News

    March 13, 2014

    முஸ்லிம்களுக்கு காணி விற்பது தமிழ் இனத் துரோகமாம்? யோகேஸ்வரன் M.P

    மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான இணைப்பு பாலமான மண்முனைப்பாலத்தினூடாக மிக விரைவில் பாரிய அச்சுறுத்தல் வரவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

    மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு விஜயம் செய்து அக்கிராம மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
    இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

    எதிர்வரும் ஏப்பரல் மாதம் திறக்கபட இருக்கின்ற படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான இணைப்புப் பாலமான மண்முனைப்பாலம் திறக்கப்படுவதனால் காத்தான்குடி சிலவேளைகளில் படுவான்கரைக்குள் வரலாம் என்ற அச்சம் வந்துள்ளது.

    ஏனெனில் தற்போது அரசாங்கத்திலே இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்மார் எமது படுவான்கரைப் பகுதியிலே காணிகளை வாங்குகின்றார்கள். எமது மக்களும் அவர்களுக்கு விற்பனை செய்யும் தொகையை விட பன்மடங்கு காசு வருகின்றதுதானே என நினைத்து அவர்களுக்கு விற்று விடுகின்றார்கள்.
    இதனால் எதிர்காலத்தல் பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடுவது மாத்திரமின்றி, ஒருவகையில் எமது இனத்திற்குத் துரோகம் செய்கின்றவர்களாக மாறிவருகின்றோம் என்பதனையும் மறந்து விடக்கூடாது.

    அவ்வாறு எமது பிரதேசத்தினுள் வேறு இனத்தவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்களேயானால் நாளடைவில் எம்மக்கள் மெல்ல மெல்ல வேறு இனத்திற்கு மாறிவிடுவார்கள். இவற்றினால் எமது கலை, கலாசாரங்கள் சீரழியும், கால்நடைகள் அதிகளவில் அழிவடையும் எனவே எம்மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவற்றில் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊர்ச் சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் சீரழிந்து போய்விடுவோம். காத்தான்குடியில் ஒரு தமிழ் குடும்பமும் இல்லை. ஏறாவூர் நகரில் ஒரு தமிழ் குடும்பமும் இல்லை. அதுபோல் ஓட்டமாவடியில் 112 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தனர். அர்கள் தற்போது அங்கு இல்லை. அவர்கள் தங்களது காணிகளை விட்டு விட்டு வெளியேறிவிட்டனர் என்றார்.-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்கு காணி விற்பது தமிழ் இனத் துரோகமாம்? யோகேஸ்வரன் M.P Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top