இன்று (13.04.2014) அதிகாலை 04.10 மணியளவில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அண்மையில் அதாவது கல்முனைக்குடி முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் மரணமடைந்துள்ளதுடன் 16 பேர் காயங்களுக்குள்ளாகி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் வண்டியொன்றும் வவுனியா செல்வதற்காக கல்முனை நகரை நோக்கி பயணித்த அசோக்லேலண்ட் பஸ் வண்டியொன்றும்; நேருக்குநேர் மோதிக் கொண்டதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மரணித்தவர்களில் ஆண் ஒருவரும் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். மரணித்தவர்கள் கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய சல்மான் பாரிஸ் , சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சலீமா தமீம் ( மின்னா ) , அக்கரைப்பற்று மத்திய வீதியைச் சேரந்த 55 வயதுடைய பீபி பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதே வேளை, இன்று காலை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜுட்ஸன் விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும் வருகை தந்து மரணமடைந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் பார்வையிட்டார்
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றார்கள்.
















0 comments:
Post a Comment