ஐ.பி.எல் போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பது மூலம் அணியில் இடம் பெறுவேன் என்று ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்.
7வது தொடர் போட்டி வருகிற 16ம் திகதி அபுதாபியில் தொடங்குகிறது. இந்திய
அணியில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் இந்திய அணியில் இருந்து ஷேவாக்
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய வீரர் வீரேந்தர் ஷேவாக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம்
எடுத்துள்ளது .அவர் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி உள்ளதால் பஞ்சாப் அணிக்கு தொடக்க
வீரராக ஆடுவேன். பஞ்சாப் அணி நான் விரும்பினால் அணித்தலைவர் பதவியை
ஏற்கலாம் என்று தெரிவித்தது.
ஆனால் நான் அணித்தலைவர் பதவிக்கு வேறு சில வீரர்களின் பெயரை
பரிந்துரைத்தேன் என்றும் என்னை ஏலம் எடுத்த பஞ்சாப் அணிக்கு சிறந்த
பங்களிப்பை தருவேன் எனவும் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment