• Latest News

    April 03, 2014

    11 வயது சிறுமிக்கு மணமகனின்றி நடந்த அபூர்வ திருமணம்!

    தனது 11 வயது மகள் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும் வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என கவலையடைந்திருந்த  புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த தந்தையொருவர் தனது மகளை திருமணக்கோலத்தில் காண ஆசைப்பட்டார். 

    எனவே  இந்த தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மணமகனின்றி திருமண நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  நெஞ்சை நெகிழ வைக்கும் இச்சம்பவம் அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
    முர்ரியரா நகரைச் சேர்ந்த ஜிம் ஸெட்ஸ் என்பவரே தனது 11 வயது மகளாகிய ஜோஸியின் திருமணத்தைப் பார்க்காமல் மரணமாகப் போகிறோம் என்று கவலையடைந்திருந்தார். இந்நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஜிம் ஸெஸ்டாவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

    கடந்த மார்ச் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டிருந்தது. மணமகனற்ற இந்த திருமண நிகழ்வில் திருமண ஆடை அணிந்திருந்த தனது மகளை ஜிம் ஸெஸ்ட்டர் திருமண மேடை வரையிலான நடைபாதையில் கையைப்பற்றி அழைத்து வந்தார்.

    இந்நிலையில் மேடையில் தயாராக காத்திருந்த மத போதகர்  இருவரையும் 'தந்தை மற்றும் மகள்' என அறிவிப்புச் செய்தார். ஜோஸின் 11 ஆவது பிறந்த தினத்திலேயே இந்த திருமணம் வைபவம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 11 வயது சிறுமிக்கு மணமகனின்றி நடந்த அபூர்வ திருமணம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top