• Latest News

    April 03, 2014

    சரியான எதிர்க்கட்சி இருந்தால் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள்

    http://lankamuslim.files.wordpress.com/2013/02/dr-dayan-jayatilleka-e1396493861533.jpgநடந்து முடித்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் மற்றும் பெரும்தொகையானவர்கள் வாக்களிக்காமை தொடர்பில் கருத்துரைத்துள்ள   கலாநிதி தயான் ஜயதிலக்க , சாதாரணமாக நாடுகளில் பொதுத் தேர்தல் அல்லாத ஏனைய தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கையானது குறைந்தே காணப்படும்.

    18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம், அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தேர்தலில் வெல்ல முடியவில்லை என ஒரு சிலர் கூறுகின்றனர். இவை அனைத்து இருந்தும் வடக்கில் பெருமளவிலான படையினர் இருந்தும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.

    சரியான எதிர்க்கட்சி இருந்தால் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள். அவ்வாறான வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் மக்கள் வாக்களிக்க எண்ணுவதில்லை. நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீதான் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.

    பிரதான எதிர்க்கட்சி மீதும் மக்களுக்கு தற்போது நம்பிக்கையில்லை. இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படாது போனால் மக்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தூர விலகிச் செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

    அப்படி நடந்தால், வெளியுலக சக்திகளால் நாட்டை இலகுவாக தோற்கடிக்க முடியும். மக்களை கவர வேண்டுமாயின் அரசாங்கம் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.  அப்படியில்லை என்றால், கவர்ச்சிகரமான, மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட மாற்று எதிர்க்கட்சி உருவாக வேண்டும்.

    அப்படியில்லாமல் படித்த , புத்திசாலிகளான ஈழவாதிகளுடன் எப்படி சர்வதேச ரீதியில் போட்டியிடுவது என்ற கேள்வியை தான் நாம் கேட்க வேண்டும் என்றும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சரியான எதிர்க்கட்சி இருந்தால் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top