• Latest News

    April 11, 2014

    ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாடு அசுரவேகத்தில் அபிவிருத்தியடைகிறது: ஹரிஸ் எம்.பி

    மருதமுனை நிருபர்;
    அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் எமது நாட்டின் அபிவிருத்தி அசுரவேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த அபிவிருத்தியில் நாமும் பங்காளிகளாக இணைந்து எமது பிரதேசத்தின் அபிவிருத்தி இலக்கை அடைய எல்லோரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும். என மருதமுனை மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தார் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும,; கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிறைவான இல்லம்-வளமான தாயகம், 'கிராம் கிராமமாக வீடு வீடாக' தேசிய அபிவிருத்தி நிகழ்சிசித்திட்டம்-2014 மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை மருதமுனை மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நடமாடும் சேவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ். இவ் வேண்டுகோளை விடுத்தார்.
    கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப்சம்சுதீன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.ஹூசைன், திட்டமிடல் பணிப்பாளர் மோகனகுமார், திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், திவிநெகம  மகாசங்க முகாமைத்தவப்; பணிப்பாளர் திருமதி பரீரா சஹீட், திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் உள்ளீட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும உத்தியோகத்தர்களும் .பொது மக்களும் கலந்த கொண்டனர்.
    இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- மக்கள் பங்களிப்புடன் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு தோறும் முன்னெடுக்கப்பட இருக்கின்ற  அபிவிருத்தி வேலைத்திட்டதில் எல்லா மக்களும்  இணைந்து கொள்ள வேண்டும். உங்கள் பிரதேசத்தில் உங்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை நீங்களே இனங்காட்ட வேண்டும்.
    இந்த வேலைத் திட்டத்தில் எங்களுக்குள் போட்டி பொறாமை நான் பெரியவன் நீ சிறியவன் என்ற நிலை வந்தால் எமக்கான அபிவிருத்தி கிடைக்காமல் போய்விடும். ஆகவே யதார்த்த்தை உணர்ந்து செயற்பட வேண்டும். அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஷ அவர்கள் 2014ம் ஆண்டில் மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்க இருக்கின்ற இந்த வேலைத்திட்டத்தில் இப்பிரதேச மக்களும் பங்குதாரர்களாக இணைந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
    பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஷ அவர்கள் கல்முனை அபிவிருத்திக் குழுவை அண்மையில் கொழும்புக்கு அழைத்து கல்முனை அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்து 161மில்லியன் ரூபாக்களை ஒதக்கி இருக்கின்றார். இந்த நிதியை நாங்கள் மக்களுக்கு பயன்படக்கூடிய நல்ல அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன் படுத்த வேண்டும்.
    மருதமுனையில் பாடசாலைகள், வீதிகள், வைத்தசாலை உள்ளீட்ட பல்வேறு அபிவிருத்திகள்  முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இத் தேவைகளை மக்கள் ஊடாகக் கண்டறிய வேண்டும் என்பதற்காகவே மக்களை வலுவூட்டும் இந்த நடமாடும் சேவை ஏற்பாட் செய்யப்பட்டிருக்கின்றது. கல்முனைப் பிரதேசத்திலே இலஞ்சம், ஊழல்,அநீதி என்பவற்றை ஒளித்து மக்களுக்கான நல்லாட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
    அரசியல் அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற  மருதமுனை கிராமம் அபிவிருத்தி என்று வருகின்ற போது கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட்டு  அபிவிருத்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலர் அடிமட்டத்தில் இருந்து கொண்டு விதண்டாவாதம் புரிந்து எதையும் சாதிக்க முடியாது என்பதை மருதமுனைப் பிரதேச கல்விமான்கள் உணர வேண்டும்.
    நாட்டின் தேசிய அரசியல் இன்று எவ்வாறு இருக்கிறது இனி எவ்வாறு அமையப் போகிறது என்பதையெல்லாம்  உணர்ந்து செயற்பட வேண்டும். அரசியல் கள நிலவரம் அடிக்கடி  மாறிக் கொண்டிருக்கின்றது இதகேற்ப நாமும் செயற்பட வேண்டியிருக்கின்றது. ஆகவே இந்த அபிவிருத்தியில் நாமும் பங்காளிகளாக இணைந்து எமது பிரதேசத்தின் அபிவிருத்தி இலக்கை அடைய எல்லோரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும். என அவர் மேலும் வேண்டுகோள்; விடத்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாடு அசுரவேகத்தில் அபிவிருத்தியடைகிறது: ஹரிஸ் எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top