டி20 உலக கிண்ணத்தை கைவிட்டதற்கு மந்தமாக ஆடிய யுவராஜ் சிங்தான் காரணம் என ரசிகர்கள் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு அளித்துள்ளார்.
இது பற்றி ஊடகங்களுக்கு பதிலதித்த டோனி, யுவராஜ் சிங் தன்னால்
முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சித்தார். கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில்
ஒரு குறிப்பிட்ட நபரை குற்றம் சாட்டுவதில் எந்த பயனும் இல்லை.
யுவராஜ் சிங் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது இடத்தை
இழந்துள்ளார். இந்த நிலையில், நடந்து முடிந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட்
தொடரில் 5 போட்டிகளில் வெறும் 100 ஒட்டங்கள் மட்டுமே எட்டியிருப்பது
குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

0 comments:
Post a Comment