டி20 உலகக்கிண்ண போட்டியில் சந்தித்த தோல்வி தொடர்பாக சகவீரர்களை
விமர்சித்த குற்றத்திற்காக அப்ரிடியின் அணித்தலைவர் பதவி பறிபோகவுள்ளது.
டி20 உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகளிடம் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இருந்து நாடு திரும்பியதுமே தோல்விக்கு
பொறுப்பேற்று அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ்
அறிவித்தார்.
ஆனால் கராச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அப்ரிடி,
பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் முகமது ஹபீஸையும், சக வீரர்களையும்
பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திட்டியுள்ளார்.
அப்ரிடியின் இந்த பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேத், அப்ரிடியின் பேச்சு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு கிரிக்கெட் வாரியத்திடம் முன் அனுமதி
பெற வேண்டும் என்ற விதி இருந்தும், அப்ரிடி யாரிடம் அனுமதி கேட்டு இவ்வாறு
பேசினார் என்பது தெரியவில்லை.
இதனால் அவருக்கு அணித்தலைவர் பதவியை வழங்கும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

0 comments:
Post a Comment