• Latest News

    April 25, 2014

    மத விவகாரங்கள் கையாள பொலிஸ் பிரிவு என்பது நாம் பல காலமாக வலியுறுத்தி வந்த ஒன்று : பொதுபலசேனா (Video)

    முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கையை நிறுத்தப் போவதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.
    மஹியங்கனை ரொட்டவெல மகாவெலி விஹாரையின் மகாநாயக்கரான வட்டரக்கே விஜித தேரர், தமக்கு எதிராக பொதுபலசேனா மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்பில் அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். தம்மை கொல்வதற்கு பொதுபலசேனா முயற்சித்ததாகவும் விஜித தேரர் முறையிட்டிருந்தார்.
    நேற்றைய தினம் வட்டருக்க தேரரை தேடி ரிசாத் பதியூதின் அமைச்சுக்கு சென்றதாகவும் வட்டருக்க தேரர் அங்குதான் இருந்தார் எனவும் தேரர்கள் என்ற முறையில் பொய் கூறவில்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தங்களுடைய தேவைகளுக்காக காவி உடையை பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் ரிசாத் பதியூதினை கேட்டுக் கொள்வதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் அமைச்சர்களுக்கு காவி ´ஹராம்´ என அவர் குறிப்பிட்டார்.
    இதேவேளை வட்டரக்கே விஜித தேரரை தேசிய சங்க சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொதுபலசேனாவுக்கு ஆதரவான மாகாண தேசிய சங்க சபையும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இந்தநிலையிலேயே நேற்று அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சு அலுவலகத்தில் விஜித தேரர் ஒழிந்திருப்பதாக கூறி பொதுபலசேனா முற்றுகை போராட்டத்தை நடத்தியது.
    மத விவகாரங்கள் குறித்து செயல்பட பொலிஸ் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தாம் பல காலமாக வலியுறுத்தி வந்த ஒன்று எனவும் தேரர் கூறினார். எனவே இனி மத எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவோரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நாட்டில் உள்ள அனைவரும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக மாற வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.-TC

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத விவகாரங்கள் கையாள பொலிஸ் பிரிவு என்பது நாம் பல காலமாக வலியுறுத்தி வந்த ஒன்று : பொதுபலசேனா (Video) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top