அஸ்ரப் ஏ சமத்;
எந்த ஒரு நாட்டின்
அரசியலமைப்பில் ஒரு மனிதனுக்கு பேச்சு சுதந்திரமும் கருத்துச்
சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கும்போது அதனை மறுக்கும் வகையில் நேற்று
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவங்கள் இந்த நாட்டின் அரசியல்
அமைப்பை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது. என ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும, நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்றுக்காலை கொழும்பு நிப்போன் ஹோட்டலில்
ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி நுழைந்த ஒரு
சாரார் பேச்சு சுதந்திரத்தை தடுத்தி நிறுத்தியமை கவலை தருவதாகவும் அமைச்சர்
அங்கு பிராதான உரை நிகழ்த்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு பொருளாதார அமைச்சர் பசில்,
அமைச்சர் ஹக்கீம், மின்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்தின, கிழக்கு
முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர்
சேகுதாவுத், உலக சமாதாண அமைப்பின் தலைவர் டென்மாக்கைச் சேர்ந்த அபிட் அலி
அபிட் மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமட் நசீம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
ஏ.எல். ஜெமீல் ஆகியோறும் பிரதாண மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை
உறுப்பினால் ஏ.எல். ஜெமீலுக்கும் மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமட்
நஜீமுக்கும் உலக சமாதாணத் தூதுவர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நெல்சமன்
மண்டேலா சமாதாண விருது அமைச்சர்களான ரவுப்ஹக்கீம், பசில் ராஜபக்சவுக்கு
வழங்கப்பட்டது. அத்துடன் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின. தேசபந்து ஜெசீமா
இஸ்மாயில், கலாநிதி ஜெகான் பெரேரா, புஞ்சிகேவா, ஆகியோறுக்கும் விருதுகள்
வழங்கப்பட்டன. இவற்றினை இந்த அமைப்பின் தலைவர் அபிட் அலி அபிட்
(டென்மார்க்) வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் தூதுவர்கள், முஸ்லீம்
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை அமைச்சர் மற்றும்
உறுப்பினர்கள், கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் கல்முனை நிந்தவுர்
பிரதேசசபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் றவுப் ஹக்கீம் அங்கு தொடர்ந்து
அமைச்சர் றவுப் ஹக்கீம் அங்கு தொடர்ந்து
உரையாற்றுகையில் -ரணில் விக்கிரமசிங்க
பிரதம மந்திரியாக பதவி வகித்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாக
பண்டாரநாயக்க ஆட்சியில் ரணில் அரசில் ஒரு முக்கிய பங்காலியாக முஸ்லீம்
காங்கிரஸ் விழங்கியது. அச் சமயத்தில் விடுதலைப்புலிகள் மிகவும்
பலம்பொருந்தி அவர்களுக்கென்று சொந்தமான நீதிமன்றம், பொலிஸ்பிரிவு இருந்த
காலத்தில ரணில் விக்கிரம சிங்கவினால் உலக நாடுகளின் ஆசிர்வாதத்தோடு ஒரு
சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த அமைச்சரவையில் இங்கு
இருக்கின்ற ராஜித்த சேனாரததினவும் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.அதே
போன்ற காலாநிதி ஜெகாண் பெரேரா அந்த சமாதனத்தைக் கொண்டுவருவதற்காக மிகவும்
உழைத்த ஒருவர் என இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன.
சர்வதேச நாடுகள் ஒழுங்கு செய்த அந்த சமாதான மேசையில் விடுதலைப் புலிகள்
சார்பில் அண்டன் பாலசிங்கமும் அரசாங்கத்தின் சார்பில் தற்போதைய வெளிநாட்டு
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரீஸ் பேச்சுவார்;த்தையில்
ஈடுபட்டிருந்தார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முஸ்லீம் காங்கிரஸ்
தலைமைத்துவத்துக்கும் சமாமானதொரு பங்கு வழங்கப்பட்டு பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டது. அதற்கான வாய்ப்பு சர்ந்தப்பமும் பங்காலிக் கட்சி என்ற வகையில்
வழங்கப்பட்;டிருந்தது. அந்த ஆட்சி 2 வருட காலத்துக்குள் நீடிக்காமால்
பாராளுமன்றம் கலைக்கபட்டு மிண்டும் தேர்தல் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
அதில் தற்போதைய மக்கள் ஜக்கிய முன்னணி கட்சி அருதிப் பெரும்பாண்மை.
0 comments:
Post a Comment