• Latest News

    April 15, 2014

    கல்முனையில் சடலம் மீட்பு


    எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்;
    நேற்று (15-04-2014) மாலை 4.30 மணியளவில் கல்முனை மாநகரசபை எல்லை பிரதேசமான விஷ்ணு கோவில் வீதி நீலாவணை கடற்கரைக்கு அண்மையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக கல்முனை போலீசார் தெரிவித்தனர்.

    சடலமாக காணப்பட்டவர் அரசடி வீதி வீரமுனை 01 ஐ சேர்ந்த சிவநேசத்துரை ராமச்சந்திரன் வயது 50 என்ற 06 பிள்ளைகளின் தந்தையாவார். என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    அவரின் மனைவி முருகன் சித்தரா தகவல் தருகையில் எனது கணவர் அடிக்கடி மதுபானம் பாவிப்பது வழக்கம் அவர் மருதமுனையைச் சேர்ந்த மாகாண அமைச்சின் செயலாளரிடம் கூலிவேலை செய்பவர். அவரிடம் சம்பளம் பெற்று என்னிடம் தருவார். என்று தெரிவித்தார்.

    மரணம் சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    Displaying P1240155.JPG 
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையில் சடலம் மீட்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top