அம்பாறை மாவட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் இறக்காமம் பிரதேச சபையின் மூன்று ஆண்டு நிறைவுடன் கூடியதாக அங்கு கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்குபற்றிச் சிறப்பித்த முக்கிய நிகழ்வுகள் திங்கள் கிழமை (21) முழு நாளும் இடம்பெற்றன.
நான்கு வீதிகள் அமைச்சரால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நெல்சிப் திட்டத்தின் கீழான பொதுச் சந்தையும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியால் இறக்காமம் பிரதேச சபை வளவில் நிறுவப்பட்டுள்ள சமூக நல நிலையமும் அமைச்சர் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.
இப் பிரதேசத்தில் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரணம்), க.பொ.த (உயர்தரம்) போன்ற பரீட்சைகளின் சாதனை புரிந்தோருக்கும், பட்டதாரிகளுக்குமான பாராட்டு விழாவும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் பிரதம அதிதி அமைச்சர் ஹக்கீமின் பங்குபற்றுதலுடன் 'முற்றத்து மொட்டுகள்' 2014 என்ற மகுடத்தின் கீழ் அன்று மாலை விமரிசையாக நடைபெற்றது. நான்கு வீதிகள் அமைச்சரால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நெல்சிப் திட்டத்தின் கீழான பொதுச் சந்தையும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியால் இறக்காமம் பிரதேச சபை வளவில் நிறுவப்பட்டுள்ள சமூக நல நிலையமும் அமைச்சர் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.
இறக்காமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காதி நீதிமன்றக் கட்டிடத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜமீல், ஏ.எல்.எம். நஸீர், ஏ.எல். தவம், இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் மௌலவி யு.கே. ஜபீர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அன்ஸில், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் வாஸித், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
(அமைச்சின் ஊடகப் பிரிவு)








0 comments:
Post a Comment