சுலைமான் றாபி ;
கல்முனை -
அக்கரைப்பற்று வீதியில் உள்ள சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில்
இன்று (02.04.2014) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார்
சைக்கிளின் உரிமையாளர் கவலைக்கிடமான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தானது WN 4653ம் இலக்க மோட்டார்
சைக்கிளும், RA 2010ம் எனும் இலக்க உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதினாலையே இந்த
விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment