கால்வாய் விலங்கு நோய் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கால்நடை உற்பத்தி
சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல் மூலம்
விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்குற்பட்ட 11 பிரதேச செயலாளர்
பிரிவுகளில் தம்பலகாமம் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுகள்
தவிர்ந்த. கிண்ணியா, மூதூர்,திருகோணமலை பட்டணமும் சூழலும், மொரவெள,
கோமரங்கடவல, பதவிசிறிபுர, சேருவில, ஈச்சலம்பற்று, கந்தளாய் ஆகிய 09
செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும அரசாங்;க கால் நடை வைத்திய அதிகாரிகள்
கடந்த 03 வார காலமாக விலங்குகளுக்கு கால்வாய் நோய் ஏற்பட்டதாக அறிக்கை
எதனையும் செய்யவில்லை.
கால்வாய் நோய்த்தொற்று காரணமாக பசுமாடு, எருமை மாடு, வெள்ளாடு,
செம்மறியாடு மற்றும் பன்றி போன்ற விலங்குகள் நோய்த் தொற்றத்தக்க
விலங்கினங்களாக பிரகடனப்படுத்தும் இல.1850/30, 2014.02.19 ஆம் திகதியன்று
இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி பத்திரிகை
வெளியாகியிருந்தது.
கால் நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ. கே.டி.
சில்வாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட இவ்வர்த்தமானி அறிவித்தலின் முலம்
நாட்டின் பல்வேறு பிரதேசங்கள் நோய்த்தொற்று பிரதேசமாகவும் மேற்குறித்த
விலங்கினங்கள் நோய்த் தொற்றத்தக்க விலங்கினங்களாகவும்
பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தடைகள் நீக்கப்பட்டுள்ளமைக்கான அறிவிப்பு கடந்த 21.03.2014 முதல்
நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மாடுகளை அறுக்கும்
நடவடிக்கை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment