எம்.வை.அமீர்;
சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் (2013-12-28) சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பாலர் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இப்பாலர் பாடசாலையில் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறுகின்ற மாணவர்கள் அனைவரும் அதிதிகளால் பட்டம் சூட்டப்பட்டு, சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களின் பல்வேறு வகையான கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இம்மாணவர்களுக்கு அதிதிகள் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
இதில் பெரும்திரளான பெற்றோரும் பொது மக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்ததை அவதானிக்க முடிந்தது.
0 comments:
Post a Comment