எஸ்.அஷ்ரப்கான்;
இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்த பிற்பாடு பல்வேறுபட்ட சிறுபான்மை கட்சிகள் தோன்றி சிறுபான்மை இனத்துக்காக போராட முன்வந்தன. எனினும் காலப்போக்கில் அக்கட்சிகள் அனைத்தும் சில சலுகைகளுக்காகவும் அற்ப வசதிவாய்ப்புக்களுக்காகவும் விலைபோகும் நிலையே இன்று காணப்படுகிறது என்று முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட கணக்காளருமான எம். இஸ்மாயீல் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போது,
தனது கட்சியின் அடிப்படைப் போக்கை மறந்து அல்லது மாற்றிக்கொண்டு இன்றுவரை பச்சோந்திகளாக செயற்பட்டுவருவதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஏன் அக்கட்சிகள் அவ்வாறுசெயற்படவேண்டும்? ஏன் தனது அடிப்படைகொள்கைகளை மாற்றிக்கொண்டு செயற்படுகிறார்கள்? எல்லாம் தங்களதுவசதிவாய்ப்புக்களுக்காக அன்றிவேறு ஏதும் காரணமாக இருக்கமுடியாது. ஆனால் இந்நிலைதொடர் சிறுபான்மையினரான நாம் தொடர்ந்தும் இடம்கொடுக்கமுடியாது. அவ்வளவு தூரம் எமது மக்கள் முட்டாள்களும் அல்லர். நாம் முஸ்லீம்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அல்லது தழிராக இருக்கலாம். ஆனால் நாங்கள் அனைவரும் பெரும்பான்மையினர் வாழும் நிலை இன்று சிறுபான்மை இனத்தவராக எமக்கு உருவாகியுள்ளதை நாம் உணராமல் இருக்கக் கூடாது.மேலும், சிறுபான்மையினராகிய எமது நிலைமை இவ்வாறுமாறுவதற்குயார்காரணம் வேறுயாரும் காரணம் கிடையாது இன்று வரை திகழ்ந்துகொண்டிருக்கும் எமது அரசியல் தலைவர்கள் என்பதனை உணரும்போது மிகவும் வேதனையாவுள்ளது. மக்கள் இன்றுசிந்திக்கும் காலம் மலர்ந்துவிட்டது. இனியும் பொறுமையாக இருக்கமுடியாது.
எனவேதான்சிறுபான்மைமக்களைசிறப்பாகமக்களைசிறப்பாகவழிநடத்தவும் இறுதி மூச்சுவரைபோராடவும் கொள்கைமாறாதகட்சியாகமலர்ந்துள்ளது முஸ்லிம் லிபரல் கட்சிஎமதுகட்சியின் முழு நோக்கமும் தனித்துவமானகொள்கையைக் கொண்டுசெயற்படுவதாகும்.
எனவே, முஸ்லிம் லிபரல் கட்சி சிறுபான்மை மக்களுக்காக தனித்துப்போராடும். மக்களுக்காக மக்களை நீதியாக ஆளும் காலம் மலர்ந்துகொண்டிருக்கிறது. இவ்வேளை எமது முஸ்லீம் லிபரல் கட்சியானது எவ்வித வேறுபாடும் காட்டாது செயற்படவுள்ளதுடன்இ நிச்சயமாக தனித்துக் குரல்கொடுக்கும்.
எனவே, சிறுபான்மை மக்கள் இணைந்து விரைந்து ஆதரியுங்கள். வெற்றியும்இ விளைவும் எம்மை வந்துசேரும். நாம் விழிக்கவேண்டும். எம்மை பகடைக்காய்களாய் பயன்படுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த பாடங்களைப் புகட்டுவோம். உறுதி எங்கள் கையில்இ வெற்றி உங்கள் கையில். விழித்தால் தெளிவுபெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

0 comments:
Post a Comment