பி.எம்.எம்.ஏ.காதர்;
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி மாவனல்லை இன்ஷிராஹ் இக்பாலின் 'நிழலைத் தேடி' சமூக நாவல்; நூல் வெளியீட்டு விழா கடந்த (27-03-2014) வியாழக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொன்டார்.
நூலாசிரியர் செல்வி இன்ஷிராஹ் இக்பாலுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சபீனா எம்.ஜி.ஹஸன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த நூல் உயர் கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கிடையே தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கான போட்டியின் நாவல் பிரிவில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவியான நூலாசிரியர் செல்வி இன்ஷிராஹ் மௌலவி ஏ.சீ.எம்.இக்பால் எழுத்தாளர் சுலைமா சமி இக்பால் தம்பதியின் சிரேஸ்ட புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment