நிந்தவூரின் முன்னணி விளையாட்டுக்கழகளில் ஒன்றான சதாம்
விளையாட்டுக்கழகம் அணிக்கு 06 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப் படுத்தப்பட்ட
கடின பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் நிந்தவூர் பொது
விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 32 உள்ளூர் மற்றும் வெளியூர் அணிகள்
கலந்து கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு நிந்தவூர்
இம்றான், லகான் ஆகிய அணிகள் மோதின. ஆரம்பத்தில் துருப்பெடுத்தாடிய
நிந்தவூர் இம்றான் அணி 05 பந்து வீச்சு ஓவர்களில் 74 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் நிக்சி அஹமட் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துருப்பெடுத்தாடிய நிந்தவூர் லகான் அணியினர் 05 பந்து வீச்சு
ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களைப் பெற்றனர். மேலதிக
17 ஓட்டங்களினால் இம்றான் அணி சம்பியனானது.
மேலும் இந்தப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற
உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்
சம்சுடீன், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள்
ஒழுங்கமைப்பின் தலைவர் ஐ.எல்.இப்றாஹீம், அம்பாறை மாவட்ட கபடி
பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட் மற்றும் விளையாட்டுக்கழகங்களின்
தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சுற்றுத்தொடரில் இரண்டாம் நிலை
பெற்ற அணிக்கு ரூபா 6,000/= பணப்பரிசும் வெற்றிக்கேடயமும்,
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூபா 10,000/= பணப்பரிசும்
வெற்றிக்கேடயமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை கடந்த வருடம்
இடம்பெற்ற சதாம் T20 போராட்டத்திலும் நிந்தவூர் இம்ரான் அணி சம்பியனானது
குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment