சுலைமான் றாபி;
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு
பெற்றுச்சென்ற கிராம உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளைப்
பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக, இன்று (20.04.2014) நிந்தவூர்
பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வு
அட்டப்பள்ளம் எம்.ரி. அஹமட் அவர்களின் தோட்டத்தில் இடம்பெற்றது. கிராம
உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஏ.எம். பலூலுல்லாஹ் அவர்களின் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர்
ஹாஜியாணி திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களும், உப பிரதேச செயலாளர்
திரு ஆர். திரவியராஜா, கணக்காளர் ஏ.ஆர்.எம் நிசாம், நிர்வாக
உத்தியோகத்தர், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சகல கிராம சேவை
உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் மேலும் சிறப்பம்சமாக
இம்முறை புதிதாக நியமனம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்களை வரவேற்கும்
நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக ஓய்வு
பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம். முஸ்தபா மற்றும் பெண்குரல் பாடகர்
றியாஸ் ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில் ஓய்வு பெற்றுச்சென்ற 22 கிராம
சேவகர்களின் சேவைகளைப் பாராட்டி விஷேட ஞாபகச்சின்னமும் வழங்கி
வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ,

0 comments:
Post a Comment