• Latest News

    April 23, 2014

    பௌத்த தேரர்கள் வீதியில் இறங்கி போராடவேண்டி வரும்

     பௌத்த தேரர்கள் வீதியில் இறங்கி போராடவேண்டி வரும் என்று பொதுபல சேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் கண்டியில் வைத்து எச்சரிக்கை விடுத்தன.

    பௌத்த சமயத்திற்கு பிற சமயங்களால் ஏற்பட்டுவரும் அச்சுறுத்தல், கசினோ சூதாட்டம், பாலியல் தொழில் வசதி உட்பட அனைத்து அனாச்சாரங்களுக்கும் அரசு முடிவு கட்டாவிட்டால் தேரர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டி வரும் என்று பொதுபல சேனா, ராவணா பலய, தேசிய சங்க சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள் இன்று மல்வத்தை மகா நாயக்கத் தேரரை சந்தித்த போது தெரிவித்தனர்.
     
    பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர், ராவணாபலயவின் செயலாளர் இத்தபானே சத்தாதிஸ்ஸ, ஜாதிக சங்க சபையின் ரஜவத்தே வப்பஹிமி, ஆகியோர் இன்று மல்வத்தை மகா நாயக்கத் தேரர் திப்பட்டுவாவே சுமங்கள தேரரைச் சந்தித்த போதே  இவ்வாறு தெரிவித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பௌத்த தேரர்கள் வீதியில் இறங்கி போராடவேண்டி வரும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top