எஸ்.அஷ்ரப்கான்;முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்க வேண்டுமென எடுக்கப்படும் முடிவை வரவேற்பதாக கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களுக்கு பொது பல சேனவினால் இழைக்கப்படும் அநீதிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக கட்சி பேதமின்றி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மீது பொது பல சேனா கட்டவிழ்த்து வி;ட்டுள்ள இந்த காடைத்தனத்துக்கு எதிராக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்று படுவது அவசியமாகும்.
பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கனிப்பது எனும் ஆலோசனை தொடர்பில் எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களும் எனது இந்த தனிப்பட்ட கருத்தினை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டை விசுவாசித்து நாட்டுக்கான கௌரவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணமாக இலங்கை கிரிக்கட் அணி பங்களாதேசில் 20-20 உலக கிண்ணத்தை இலங்கை வெற்றி கொண்ட போது முஸ்லிம் பிரதேச மெங்கும் வெற்றி கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இது இந்த நாட்டின் தேசிய இன நல்லினக்கத்துக்கான வெளிப்பாடாகும்.
அதே போன்றுதான் ஜெனீவாவில் இலங்கை;கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் முஸ்லிம் நாடுகள் வாக்களித்தன.
இவைகளை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது பொது பல சேனா காட்டி வரும் காடைத்தனத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment