எஸ்.அஸ்ரப்கான்;
தர்ஹா நகர் பாடசாலை ஒன்றின் ஆசிரியையின் 10 ஆயிரம் ரூபாய் பணம் பெண் ஒருவரால் திருடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
அளுத்கமயிலிருந்து கொழும்பிற்குச் சென்ற தனியார் பஸ்ஸிலேயே மேற்படி திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவிடயமாக குறிப்பிட்ட ஆசிரியை தெரிவிக்கும்போது,அளுத்கமயிலிருந்து கொழும்பிற்குச் சென்ற தனியார் பஸ்ஸிலேயே மேற்படி திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினம் குறித்த ஆசிரியை வேலை நிமிர்த்தம் கொழும்பிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது அருகில் நின்று கொண்டிருந்த பெண்கள் சந்தேகிக்கும்படியாக தடுமாறிக்கொண்டு நின்றுள்ளனர். பின்னர் களுத்துறையில் இவர்கள் இறங்கிச் சென்றதாகவும், பின்னர் தனது கைப்பையை அவதானித்தபோது அது திறந்து கிடந்ததனால் பணத்தை தேடியபோது 10 ஆயிரம் ரூபாய்களையும் அப்பெண்கள் திருடிச் சென்றுள்ளதாகவும், இது விடயமாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்ட ஆசிரியை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment