எஸ்.அஷ்ரப்கான் ;
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் 'கிராமம் கிராமமாக வீடு வீடாக' தேசிய அபிவிருத்தித்திட்டத்தின் நடமாடும் சேவை நாளை 2014.04.09 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

கல்முனை தொகுதியின் அபிவிருத்திக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனை-03 மற்றும் கல்முனை்ககுடி 1 தொடக்கம் 8 ஆம் பிரிவுகளில் வசிப்போர் பங்கு கொண்டு தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்நடமாடும் சேவையில் சமூக சேவைத்திணைக்களம், ஆட்பதிவுத்திணைக்களம், சமூர்த்திப்பிரிவு, சுகாதாரத் திணைக்களம், கால்நடைப்பிரிவு, பொலிஸ் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, மின்சார சபை, காணித்திணைக்களம், இளைஞர் சேவைப்பிரிவு, தபால் திணைக்களம் ஆகிய பிரிவுகளில் மக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
அத்துடன் இங்கு பாராளுமன்ற உறுப்பினரால் கிராம அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அந்தந்த பிரிவு மக்களுடன் கலந்தாலோசனையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment