ஐக்கிய இராச்சியத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ஹலால் உணவே சிறந்தது எனவும் ஹலால் முறைப்படி உயிரினங்களை அறுப்பதற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படமாட்டாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற சிறந்த இஸ்லாமிய ஊடகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்சியில் தெரிவித்தார்.
லண்டனில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இல்லாமல் செய்ய பிரித்தானிய நீதித்துறைக்கு கட்டளை இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த ஒரு முஸ்லிமும் வெறுமனே இஸ்லாத்தை பின்பற்றவில்லை மாறாக முழு நம்பிக்கையுடன் அவர்களுடைய வாழ்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும், வாழ்வின் இலட்சியங்களை அடைந்து கொள்ளவும் பின்பற்றுகின்றார்கள் என கூறினார்.
மிக விரைவில் ஹலால் உணவு அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். நான் பிரதமராக இருக்கும் வரையில் ஹலால் உணவே பிரதானமானதாக இருக்கும் எனவும் அதுவே பிரித்தானியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் என உறுதியளித்தார்.
கடந்த மாதம் டென்மார்க்கில் ஹலால் உணவு தடை செய்யப்பட்டுள்ளபோதும் பிரித்தானிய பிரதமர் மிகவும் துணிச்சலாக ஹலால் உணவுக்கு ஆதரவளித்து பாராட்டத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.

0 comments:
Post a Comment