• Latest News

    April 08, 2014

    ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பபை ஏற்படுத்த நடவடிக்கை

    எஸ்.அஷ்ரப்கான்;
    இலங்கை தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி அதனூடாக தவ்ஹீதுக்கெதிரான சவால்களை முறியடிக்கும்வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு எனும் அமைப்பு உருவாகவுள்ளது.

    எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) கல்முனையில் இவ்வமைப்புக்கான அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது. தவ்ஹீத் வாதிகள் மத்தியில் சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகள் காரணமாக அவர்கள் மத்தியில் எழுந்துள்ள மனக்கிலேசங்களை நீக்குமுகாமாக தவ்ஹீத் வாதிகளின் ஒற்றுமையூடாக பலம் பெறல் எனும் நோக்கத்தில் இவ்வமைப்பு செயற்படவுள்ளது. அன்மைக்காலமாக அம்பாரை மாவட்டம், காத்தான்குடி, கொழும்பு போன்ற பல பகுதிகளில் தவ்ஹீதுக்கெதிரான கொள்கையிலுள்ளவர்களின் நியாயமற்ற செயற்பாடுகள் ஊடாக தவ்ஹீத்வாதிகளை கருவறுக்கும் முயற்சிகள் பரவலாக காணப்படுகிறது. இதற்கு தவ்ஹீத்வாதிகளின் வாக்குகளையும் பெற்ற அரசியல்வாதிகளும் துணை போகிறார்கள்.

    தவ்ஹீத்வாதிகள் எதிர் நோக்கும் இத்தகைய பிரச்சனைகளை அவர்களினது வாக்குகளையும் பெற்று அரசியல் அதிகாரம் கிடைக்கப்பெற்றவர்கள் கணக்கில் எடுக்காமலிருப்பது மட்டுமல்ல இணைவைப்பாளர்களுக்கு துணை போகின்றமை மூலம் தவ்ஹீத்வாதிகளை ஓரங்கட்டும் முயற்சி நடைபெறுகிறது. இன்னும் சில முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகள் தவ்ஹீத் ஜமாஅத்துக்களை தடைசெய்யவும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தவ்ஹீத்வாதிகள் ஒற்றுமைப்பட்டு ஒரு சக்தியாக உருவாகும்போது ஜனநாயக ரீதியிலான தமது பேரம் பேசுதல் சக்தியை காட்டி தவ்ஹீதுக்கு முரணான செயல்களை கட்டுப்படுத்த முடியும். என்பதாலேயே ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு (எஸ். எல். ரி. ஏ. ) உருவாகவுள்ளதாக தெரிகிறது. இக்கூட்டமைப்பில் இணைந்து செய்பட்டு தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமையை பலப்படுத்த விரும்புவோர் தமது பெயர், முகவரி, அ. அ. இலக்கம் போன்றவற்றை 0775449017 எனும் இலக்கத்துக்கு எஸ். எம். எஸ் செய்யும்படி வேண்டப்படுகின்றனர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பபை ஏற்படுத்த நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top