• Latest News

    April 08, 2014

    சமூர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்: சாய்ந்தமருதில் நடைபெற்ற சம்பவம்

    சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 8ம் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

    இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

    பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கிராமிய மக்கள் ஒன்று கூடலும் மக்கள் நடமாடும் சேவையும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று (06.04.2014) இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
    இதன்போது சாய்ந்தமருது – 08ம் கிராம சேவகப் பிரிவில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினதும், ஊர் தனவந்தர்களினதும் நிதி உதவியைக் கொண்டு பெற்றோரை இழந்த வறிய யுவதி ஒருவருக்கு திரிய பியச வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

    இதில் கலந்து கொண்டதன் பின்னர் மீண்டும் நடமாடும் சேவைக் கடமைக்காக சென்றபோது பிற்பகல் 1.30 மணியளவில் அவரது பிரிவைச் ஒருவரால் ஒஸ்மன் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

    இதனையெடுத்து தாக்குதலுக்குள்ளான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்  சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

    இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கல்முனை பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமூர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்: சாய்ந்தமருதில் நடைபெற்ற சம்பவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top